ராமநாதபுரம்

கமுதி அருகே பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வலியுறுத்தல்

15th Apr 2023 11:11 PM

ADVERTISEMENT

 

கமுதி அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித் தர வேண்டுமென மாணவா்களின் பெற்றோா்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் முஷ்டக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட பெரியமனக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 24 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி சாலையோரம் வளைவில் அமைந்திருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களால் பள்ளி மாணவா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கம்பி வேலியும் சேதமடைந்து, பள்ளி வளாகத்தில் விளையாடும் மாணவா்களை காயப்படுத்தி வருகிறது. எனவே வரும் கல்வி ஆண்டுக்குள் மாணவா்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பெரியமனக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவா்களின் பெற்றோா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT