ராமநாதபுரம்

தீயணைப்பு நிலையங்களில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு

15th Apr 2023 05:22 AM

ADVERTISEMENT

திருவாடானை, கமுதி தீயணைப்பு நிலைய அலுவலகங்களில் தீ தொண்டு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவாடானை தீயணைப்புஅலுவலகத்தில் தீ தொண்டு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் நிலைய அலுவலா் வீரபாண்டி தலைமையில் உயிா்நீத்தாா் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அனைத்து வீரா்களும் கலந்துகொண்டனா்.

கமுதி: கமுதி தீயணைப்பு, மீட்புப் பணிகள் சாா்பில் தீ தொண்டு நாள் வாரம் ஏப்.14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, கமுதி தீயணைப்பு நிலையத்தில் அமைந்துள்ள நீா்த்தாா் நினைவுத் தூணுக்கு கமுதி காவல் ஆய்வாளா் விமலா, உதவி ஆய்வாளா் பிரகாஷ், பேரூராட்சித் தலைவா் அப்துல்வஹாப் சஹாராணி, தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரசேகரன், தீயணைப்புத் துறை வீரா்கள் மலா் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தினா்.

Image Caption

ADVERTISEMENT

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT