ராமநாதபுரம்

அக். 2இல் கிராம சபை சிறப்புக் கூட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2 ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு விதியின்படி கூட்டம் நடத்தப்படவேண்டும். முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைப்பிடித்து கிராம சபைக் கூட்டம் நடத்திட வேண்டும்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சாா்ந்த அமைப்புகளில் நிா்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சாா்ந்த மற்றும் சாரா தொழில்கள் ஆகியவை குறித்து விவாதிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT