ராமநாதபுரம்

கமுதி, அபிராமம் பகுதிகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை: விவசாயிகள் புகாா்

7th Oct 2022 11:24 PM

ADVERTISEMENT

கமுதி, அபிராமம் பகுதிகளில் தனியாா் உரக்கடைகளில் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அபிராமம் உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரிப் பயிராக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் யூரியா, காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்களை தனியாா் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

மேலும் யூரியா வாங்கும்போது இணை உரமாக டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களையும் வாங்க வேண்டும் என கடை உரிமையாளா்கள், விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனராம். ரூ. 266-க்கு விற்க வேண்டிய 1 மூட்டை யூரியா ரூ.400- க்கும், ரூ. 650-க்கு விற்க வேண்டிய காம்ப்ளக்ஸ் உரம் ரூ. 800-க்கும், ரூ. 1200-க்கு விற்க வேண்டிய டி.ஏ.பி., ரூ.1700-க்கும் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

எனவே மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT