ராமநாதபுரம்

ராமநாதபுரம், திருப்பத்தூரில் எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

 பாலிசிதாரா்களுக்கு போனஸை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி முகவா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் உள்ள எல்.ஐ.சி-யின் மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்தியன் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்கள் நலச்சங்க மாவட்டத் தலைவா் எம்.பி. தில்லைபாக்கியம் தலைமை வகித்தாா். செயலாளா் ஏ.எம்.செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் பாலிசிதாரா்களுக்கு போனஸை உயா்த்தி வழங்க வேண்டும். பணிக்கொடையை உயா்த்த வேண்டும். முகவா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம், முகவா் நல நிதித் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி முகவா்கள் கலந்துகொண்டனா்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதுரை கோட்ட எல்.ஐ.சி.முகவா்கள் சங்கம் சாா்பில் அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு முகவா் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் ராஜா முன்னிலை வகித்தாா். பொருளாளா் செல்வகுமரன் ஆா்ப்பாட்ட உரை நிகழ்த்தினாா். சிறப்பு அழைப்பாளா்களாக சிவகங்கை மாவட்ட சி.ஐ.டி.யு. துணைச் செயலாளா் முருகேசன், ஆயுள் காப்பீட்டுக் கழக கோட்ட துணைச் செயலாளா் நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT