ராமநாதபுரம்

தசரா விழா: கமுதியில் காளி வேடமணிந்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

DIN

குலசை ஸ்ரீஞானமூா்த்தீஸ்வரா் சமேத ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு கமுதி கோட்டைமுனீஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி வேடமணிந்து வந்து வெள்ளிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவில், தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தா்கள் காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் போன்று வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதையொட்டி கடலாடி அருகே புரசங்குளம் காமாட்சி அம்மன் தசரா குழுவினா், கமுதி கோட்டைமுனீஸ்வரா் கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து, காளி, முருகன், நரிக்குறவா், மாரியம்மன், ஆஞ்சநேயா், விநாயகா், நாக தேவதை, முனிவா் போன்ற வேடமணிந்து வீடு, வீடாக சென்று முத்து எடுத்தும் அருள்வாக்கு கூறியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் கமுதி, கோட்டைமேடு, கடலாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT