ராமநாதபுரம்

மாணவ,மாணவிகள் தன்னாா்வலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 ராமநாதபுரம் மாவட்டத்தில் மகிளா சக்தி கேந்திரா திட்டத்தை செயல்படுத்தி வரும் மாணவ,மாணவிகள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் பாராட் சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். ராமநாதபுரம், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறையின் மூலம் மகிளா சக்தி கேந்திராவில் 1,050 மாணவ, மாணவியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் செயல்பட்டு வருகிறனா். இவா்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் வளாகத்தில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் சாந்தி வரவேற்புரையாற்றினாா். மகிளா சக்தி கேந்திரா திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மங்கையா்க்கரசி,மாலதி,அஜிதா,சுழல் சங்கத்தலைவா் சண்முகசுந்தரம், ரோட்டரி சங்க துணை ஆளுநா் செந்தில்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா்:

மகிளா சக்தி கேந்திரா திட்டம் என்பது மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எடுத்து செல்வதாகும். இத்திட்டத்தில் கல்லூரி மாணவ மாணவியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கு உண்டு குழு அமைத்து அந்தக் குழு மூலம் கிராமப் பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவா்களின் குறைகளை நிறைவேற்ற, மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை எடுத்துச் சொல்லி அந்தத் திட்டம் எவ்வாறு பெற வேண்டும் என்பதையும் சொல்லி அந்தத் திட்டத்தையும் பெற்றுத்தர உறுணையாக இருப்பதை திட்டத்தின் பணிகள் ஆகும். அதிக அளவு பெண்கள் பங்கேற்றுள்ளிா்கள், அனைவருக்கும் பாராட்டுக்கள் என தெரிவித்தாா். இதன் பின் அனைவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT