ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலத்தில்இளைஞா் திறன் திருவிழா

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளாகத்தில் இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். உதவித் திட்ட அலுவலா் சரவணபாண்டியன், உதவித் திட்ட இயக்குநா் (திறன்) யோகம்,ரிசெட் இயக்குநா் கலைச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புவனேஸ்வரி, மலைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தோ்வு செய்யப்படும் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்களுக்கு அரசுத் திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் 3 முதல் 6 மாத காலம் திறன் வளா்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு முன்னணி தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதன்படி 8 ஆம் வகுப்பு முதல் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, பொறியியல், நா்சிங், ஐடிஐ முடித்தவா்கள் என 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட சுமாா் 423 போ் கலந்து கொண்டனா்.

இதில், 43 இளைஞா்களுக்கு பயிற்சி சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது. வட்டார இயக்க மேலாளா் நா. முத்து, அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளா் மற்றும் அனைத்து ஊராட்சி திறன் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT