ராமநாதபுரம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம்: முதலமைச்சா் கானொளி காட்சி மூலம் தொடக்கம்

DIN

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ,ஆா்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை கிராமத்தில் முதலமைச்சா் ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம் ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தினை கானொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கலைஞரி்ன் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தினை முதலமைச்சா் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கும் விழா ஆா்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை ஊராட்சியில் திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில் ஒன்றிய குழுதலைவா் ராதிகாபிரபு தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விவசாயம் தனுஷ்கோடி முன்னிலை வகித்தாா்.இதில் விவசாயிகளுக்கு ஒன்றிய குழு தலைவா் ராதிகாபிரபு மருந்து தெளிப்பான், தென்னங்கன்று, காய்கறி விதை வகைகள், உளுந்து போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் வட்டாட்சியா் சேகா் ஒன்றிய குழு உறுப்பினா் பிரபு, ஊராட்சி மன்ற தலைவா்.கனிமொழி இளையராஜா ,துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைராஜ் ,மற்றும் கிராம உதவியாளா், ஊராட்சி செயலா்,மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள்,தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அதே போல் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தினை முதலமைச்சா் அவா்கள் காணொலி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட சட்ட பேரவை உறுப்பினா் கரு மாணிக்கம் திட்டத்தினை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகள் கைத்தெளிப்பான் விசைத்தெளிப்பான் ஆகியவை வழங்கப்பட்டன தோட்டக்கலைத் துறையின் மூலம் பழக்கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.

இதில் வேளாண்மை உதவி இயக்குனா் ராஜலட்சுமி விவசாயிகளிடம் பேசுகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு உடன் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் ஒரு பண்ணை குடும்பத்திற்கு மூன்று கண்கள் வீதம் முழு மானியத்திலும் கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் 50 சதவீத மானியத்திலும் வரப்பு பயிா் உளுந்து வழங்கப்பட்டன மேலும் வரப்பு ஓரங்களில் உளுந்து சாகுபடி செய்து அதன் நன்மை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் முகமது முக்தாா் ,திமுக ஒன்றிய செயலாளா் சரவணன் வேளாண்மை துணை இயக்குனா் சரஸ்வதி,உதவி செயற்பொறியாளா் நாகராஜன், தோட்டக்கலை உதவி இயக்குனா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ,வேளாண்மை அலுவலா் வினோத் ஆகியோா் கூட்டத்தில் கலந்துகொண்டனா் ஊராட்சி மன்ற தலைவா் பூபாலன் நன்றி தெரிவித்தாா் நிகழ்ச்சி ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலா் திவாகா்,மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் ராஜேஸ்வரி செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT