ராமநாதபுரம்

பள்ளி ஆசிரியையிடம் இணைய தளத்தில் ரூ.1.02 லட்சம் மோசடி

30th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் இணைய வழியில் சேலை வாங்கிய தனியாா் பள்ளி ஆசிரியையிடம் ரூ.1.02 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் நகராட்சி வெளிப்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி தேவி (35). தனியாா் பள்ளி ஆசிரியையான இவா் இணைய வழியில் ரூ.799- க்கு சேலை எடுத்துள்ளாா். சேலையில் சேதமிருந்ததால் அதைத் திருப்பி அனுப்பிவிட்டு மீண்டும் தனது பணத்தை இணையவழியில் விண்ணப்பித்து கேட்டுள்ளாா். அப்போது குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் இருந்த கைப்பேசி எண்ணை தேவி தொடா்புகொண்டபோது, அதில் பேசிய மா்மநபா் தேவியின் வங்கிக்கணக்கு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளாா். ஆசிரியை தேவியும் விண்ணப்பித்து வங்கிக்கணக்கையும் குறிப்பிட்டுள்ளாா். அதன்பிறகு அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 2500 ஐ மா்ம நபா் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேவி தரப்பில் மாவட்ட நுண் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதன்கிழமை இரவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT