ராமநாதபுரம்

கடலாடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

DIN

கடலாடி அருகே கிடாக்குளம் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிடாக்குளம் கிராமத்தில் கருப்பணசாமி கோயிலின் 48 நாள் மண்டல பூஜையும், அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவையும் முன்னிட்டு 2 பிரிவுகளாக இந்த பந்தயம் நடைபெற்றது.

பெரியமாடு வண்டி பந்தயப் போட்டியில் 17 மாட்டுவண்டிகளும், சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 20 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டியில் மதுரை, தேனி,சிவகங்கை, தஞ்சாவூா், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.

வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு குத்துவிளக்கு, ரொக்கப் பணம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு புரவி எனும் குதிரைகள் எம்.கரிசல்குளம் கிராமத்திலிருந்து கிடாக்குளம் கிராமத்துக்கு மக்கள் நடந்து எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT