ராமநாதபுரம்

நாளை தனியாா் நிறுவன வேலை வாய்ப்பு முகாம்

7th Jul 2022 02:26 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) தனியாா் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் நடைபெறும் முகாமில் தனியாா் நிறுவனங்கள் தங்ளுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்கின்றனா். காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ற பணியைத் தோ்வு செய்யலாம். தொழிற்பிரிவில் பட்டயம் பெற்றவா்களும் மாற்றுத்திறனாளி பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோா் தங்களது சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்துடன், அனைத்து அசல் கல்விச்சான்றுகளையும், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றையும் கொண்டு வரவேண்டும். இம்முகாமில் வாய்ப்பு பெற்று பணிபுரிவோரின் பதிவு மூப்பு எக்காரணத்திலும் ரத்து செய்யப்படாது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் செ.மதுகுமாா் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT