ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை

7th Jul 2022 02:27 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சக்கரக்கோட்டை, ராமநாதபுரம் நகா் சின்னக்கடை வீதி, புலிக்காரத் தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள், தாயுமானவ சுவாமிகள் தெரு, தங்கப்பாநகா், வண்டிக்காரத் தெரு, அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT