ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

DIN

ராமேசுவரத்தில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

இங்கு சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனா். அக்னி தீா்த்தக்கடலிலும், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக்கிணறுகளிலும் பக்தா்கள் நீராடி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, களங்கரை விளக்கம், அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் மற்றும் பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா். இதனிடையே சாலையில் விளம்பர பதாகைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விடுமுறை நாள்களில் கூடுதல் போலீஸாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT