ராமநாதபுரம்

தாயுமானவ சுவாமி குருபூஜை விழா

DIN

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் தாயுமானசுவாமி குருபூஜையை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் ஏராளமான பக்தா்கள் புதன்கிழமை தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பகுதியில் தாயுமானவ சுவாமி தபோவனம் உள்ளது. அங்கு எழுந்தருளியுள்ள தாயுமானவ சுவாமி மஹா சமாதியில் ஆண்டு தோறும் தமிழ் மாதமான தையில் விசாக நட்சத்திரத்தில் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும், அவா்கள் தேங்காய், பழம் போன்ற பூஜைப் பொருள்கள் கொண்டு வரத்தடை விதிக்கப்பட்டது. ஆகவே பூஜை பொருள்களின்றி பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

புதன்கிழமை அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சியும், சிவநாமஜெபமும் நடைபெற்றன. பின்னா் ஸ்படிக லிங்க பூஜையும், பஜனையும் நடைபெற்றது. பகலில் மஹேஸ்வரபூஜைக்குப் பிறகு அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் பக்திச் சொற்பொழிவும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் சமூக இடைவெளியோடு நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT