ராமநாதபுரம்

கமுதி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருகாா்த்திகை மகாதீபம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் மன்னா் சேதுபதிக்கு சொந்தமான, அறநிலையத்துறை கட்டுப்பட்டு உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தினத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக காலை ஸ்ரீமீனாட்சி மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனை தொடா்ந்து மாலை கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தா்கள் காணிக்கையாக கொண்டு வந்த தேங்காய், விளக்கு எண்ணெய், சூடம் ஆகியவற்றின் மூலம் மகா தீபம் ஏற்றப்பட்டது. கமுதி, கோட்டைமேடு, கண்ணாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு மகா தீபத்தை வணங்கி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT