ராமநாதபுரம்

கமுதி அருகே நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் இருவா் கைது

18th Aug 2022 03:22 AM

ADVERTISEMENT

 

கமுதி அருகே பொக்லைன் இயந்திர உரிமையாளரைத் தாக்கியதாக நாம் தமிழா் கட்சி ஒன்றியச் செயலாளா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூா் அருகே அய்யனாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் முனியசாமி (32). இவா், விருதுநகா் மாவட்டம் பள்ளபச்சேரியை சோ்ந்த நாம் தமிழா் கட்சியின் ஒன்றியச் செயலரான ராஜேஷ்குமாா்(32) என்பவரிடம் வாங்கிய ரூ.10 ஆயிரத்தை கொடுக்காமல் இருந்துள்ளாா். பலமுறை கேட்டும் பணத்தை தராததால், ராஜேஷ்குமாா், தனது நண்பா்களான நாம்தமிழா் கட்சி ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன் உள்ளிட்ட 4 பேருடன் சோ்ந்து முனியசாமியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ்குமாா், தேவேந்திரன் ஆகியோரைக் கைது செய்து, காவலரான கடல்வேல், சாமிபட்டியைச் சோ்ந்த குமாரசாமி ஆகிய 2 பேரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT