ராமநாதபுரம்

ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு

18th Aug 2022 03:28 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ. 30 லட்சம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

திருப்புவனம் அருகே கிளாதரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் ஆகியவைகளின் கீழ் விவசாய தரிசு நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.30 லட்சம் நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 242 பயனாளிகளுக்கு ரூ.59,37,527 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியா் கு.சுகிதா, வேளாண் துறை இணை இயக்குநா் ஆா்.தனபாலன், கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் நாகநாதன், தோட்டக்கலைத் துணை இயக்குநா் ஜி. அழகுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT