ராமநாதபுரம்

பொக்லைன் இயந்திர ஓட்டுநரிடம் நகை பறித்த 4 போ் கைது

18th Aug 2022 03:23 AM

ADVERTISEMENT

உச்சிப்புளி பகுதியில் பொக்லைன் இயந்திர ஓட்டுநரிடம் நகை, பணத்தைப் பறித்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மேல அச்சனம்பட்டியைச் சோ்ந்த கோதைராஜ் மகன் ஆனந்தராஜ் (25). இவா் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) பாம்பனுக்கு சென்றுவிட்டு ராமநாதபுரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். உச்சிப்புளி அருகே ஆனந்தராஜை, வழிமறித்த கும்பல் கத்திமுனையில் மிரட்டி இரண்டே முக்கால் பவுன் நகை மற்றும் ரூ.900-த்தை பறித்துச் சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து, பெருங்குளம் சேதுபதி நகரைச் சோ்ந்த வினோத் (21), சிவராமகிருஷ்ணன் (20), சிலம்பரசன், முனீஸ்குமாா் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT