ராமநாதபுரம்

கமுதி இயற்கை விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

தோட்டக்கலை பயிா்களை அதிகம் விவசாயம் செய்ததற்காக மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்த கமுதி இயற்கை விவசாயிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கோரை பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி ராமா் (48). இவா் வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இயற்கை உரங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிா் சாகுபடி செய்து மாவட்ட அளவில் இரண்டாவது பரிசு பெற்றாா். ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவருக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இயற்கை உரங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிா் சாகுபடி செய்ததாக ராமா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT