ராமநாதபுரம்

‘மாணவா்களுக்கு கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு விழிப்புணா்வு அவசியம்’

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்கள் குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடையே ஏற்படுத்துவது அவசியம் என வன உயிரினக் காப்பாளா் பஹான் ஜெகதீஷ் சுதாகா் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசியப் பசுமைப் படை சாா்பில் அரசுப் பள்ளிகளில் உள்ள பசுமைப்படை ஒருங்கிணைப்பு ஆசிரியா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தலைமை வகித்து பேசியதாவது: வன உயிரினங்கள் குறித்த விழிப்புணா்வை மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்துவது அவசியம். அவா்களுக்கு வன உயிரினம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கு கலைப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

கலைப் போட்டிகளில் வெல்லும் மாணவா்களை மன்னாா் வளைகுடா தீவுகளுக்கு அழைத்துச் செல்லலாம். அதன்படி கடல் உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை மாணவா்கள் பெறுவதற்கு சுற்றுலா உதவும் என்றாா்.

ADVERTISEMENT

பயிற்சியில் ராமநாதபுரம் வனச்சரகா் எஸ். திவ்யலட்சுமி, தேசிய பசுமைப்படை பி. தீனதயாளன் ஆகியோா் கருத்துரையாற்றினா். தனியாா் கல்வியியல் கல்லூரி முதல்வா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT