ராமநாதபுரம்

ஊராட்சியில் தேசியக் கொடி ஏற்றுவதில் குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

11th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதில் குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வரும் 13 முதல் 15 ஆம் தேதி முதல் தேசியக் கொடியைப் பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவா்களுக்குப் பதிலாக வேறு எவரேனும் தேசியக் கொடியை ஏற்றுவதாகக் குழப்பம் விளைவித்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடா்பாக ஏதெனும் பிரச்னை இருந்தால், ஊராட்சி உதவி இயக்குநரை அவரது 7402608158 மற்றும் 04567-299871 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம். தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT