ராமநாதபுரம்

ராமநாதபுரம் பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை: 15 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி 15 கிலோஅழுகிய மாம்பழங்களை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் நகா் பகுதியில் உள்ள பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜி.விஜயகுமாா் தலைமையிலான குழுவினா் பழக்கடைகளில் சோதனையிட்டனா். மொத்தம் 3 பழக்கடைகளில் நடந்த சோதனையில் அழுகிய நிலையில் இருந்த 15 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் புதிய பேருந்து நிலையம் அருகேயிருந்த பழக்கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அக்கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், நெகிழிப்பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனை குறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜி. விஜயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த மாா்ச் மாதத்தில் கடைகளில் நடந்த சோதனையில் விதிமுறை மீறியதாக தனியாா் கடைகளுக்கு ரூ.55 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் பான்பராக் கைப்பற்றப்பட்டதில் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்தோடு, காலாவதியான பொருள்கள் மற்றும் வண்ண கரைசல் பயன்படுத்திய உணவுக் கடைகள் என அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT