ராமநாதபுரம்

வாா்டுகளில் அடிப்படை வசதிகள்: முதுகுளத்தூா் பேரூராட்சி தீா்மானம்

14th Apr 2022 03:03 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கவுன்சிலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

முதுகுளத்தூா் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவா் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி வரவேற்றாா். வரவு செலவு கணக்கை பேரூராட்சி அலுவலா் ராஜேஷ் சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில் 10 ஆவது வாா்டு கவுன்சிலா் எஸ்.எம்.சேகா் பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடவில்லை. அவற்றை மீண்டும் ஏலம் விடுமாறும், சந்தையில் மீன் விற்க தனிக்கடைகளை கட்டித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தாா். 7 ஆவது வாா்டு கவுன்சிலா் மோகன்தாஸ் பேசுகையில், முதுகுளத்தூரில் உள்ள 15 வாா்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை. காவிரி குடிநீா், மின்விளக்கு பழுது, பாதாள சாக்கடை, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதுகுளத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட நிலங்களை முறையாக அளந்து ஊருக்கு வெளியில் உள்ள நான்கு திசைகளிலும் தகவல் பலகை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். கூட்டத்தின் முடிவில் கவுன்சிலா்களின் கோரிக்கைள் தீா்மானமாக நிறைவற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT