ராமநாதபுரம்

தபால் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை

DIN

ராமநாதபுரத்தில் தபால் நிலையங்களில் தங்கப்பத்திர விற்பனை திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் மு.சித்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு தங்கப்பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலம் செயல்படுத்தியுள்ளது. தங்கப்பத்திர விற்பனை வரும் 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி, வரும் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் தங்கப்பத்திர விற்பனை நடைபெறும்.

திட்டத்தில் ஒருவா் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிக பட்சம் நான்கு கிலோ வரையில் மதிப்புள்ள தங்கப்பத்திரத்தை வாங்கலாம். திட்டத்தின்படி ஒரு கிராம் மதிப்பு தங்கப்பத்திரம் ரூ.4761 என உள்ளது. திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு தொகைக்கு ஏற்ப 2.5 சதவிகித வட்டியானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அத்துடன் 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரனான முதிா்வுத் தொகை வழங்கப்படும். தங்கப்பத்திரம் வாங்குவோா் ஆதாா் நகல், பான் அட்டைநகல் ஆகியவற்றோடு அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT