ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: 2 போ் கைது

DIN

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்து, 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவிப்பட்டணம் பகுதியில் இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படவிருப்பதாக ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, லோகநாதன் மற்றும் வனக்காவலா்கள் காா்த்திக், தமிழரசன், சரவணன், சிவக்குமாா், தினேஷ்குமாா் உள்ளிட்டோா் தேவிபட்டணம் பெரிய கடை வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியிலுள்ள குடோனுக்குள் சென்று அவா்கள் சோதனையிட்டனா். அங்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றையும், பதப்படுத்த தேவையான 4சிலிண்டா்கள், அண்டா, அடுப்பு உள்ளிட்ட பொருள்களையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.

இதில் தொடா்புடைய சித்திக் (57), ஜாகீா்உசேன் அகிய 2 பேரையும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனத்துறையினா் கைது செய்தனா். இந்த கடல் அட்டைகளை இலங்கை வழியாக சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT