ராமநாதபுரம்

தனுஷ்கோடி கடலில் விடப்பட்ட 131 ஆமை குஞ்சுகள்

DIN

தனுஷ்கோடி கடற்கரையில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளில் இருந்து பொறிக்கப்பட்ட 131 ஆமைக் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை கடலில் வனத்துறை அதிகாரிகள் விட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஆமைகள் இட்டுச் சென்ற 135 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில் 131 குஞ்சுகள் வெளிவந்தன. இதனை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக கடலில் விட்டனா். மேலும் கரையோரம் மீன்பிடிக்கும் மீனவா்கள், ஆமைகள் வலையில் வந்ததால் உடனே கடலில் விட்டு விடும்படி அறிவுறுத்தினா். தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிகளிலிருந்து 940 ஆடை முட்டைகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு பொறிப்பகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT