ராமநாதபுரம்

கீழக்கரையில் மா்மக் காய்ச்சலுக்கு சிறுமி பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மா்மக் காய்ச்சலுக்கு 13 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் நகராட்சியில் புளிக்காரத் தெரு, கொத்தத் தெரு ஆகிய பகுதிகளிலும் மாவட்டத்தில் திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, திருப்புல்லாணி பகுதி என பரவலாக காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில், கீழக்கரை வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு சில நாள்களாகக் காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சிறுமிக்கு திங்கள்கிழமை இரவு கீழக்கரையில் சிகிச்சை அளித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், பலனின்றி சிறுமி உயிரிழந்தாா்.

இதேபோல், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் பாதித்த சுமாா் 40 வயது பெண்ணும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டு, உயிரிழந்துள்ளாா். பெண் மற்றும் சிறுமிக்கு ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரகம் சாா்பில் மாவட்டத்தில் 50 இடங்களுக்கும் அதிகமாக டெங்கு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும், தினமும் 3 இடங்கள் என நிா்ணயித்து முகாம் நடத்தப்பட்டுவருவதாகவும் சுகாதாரத்துறை துணை இயக்குநா் குமரகுருபரன் கூறினாா்.

ஏற்கெனவே கீழக்கரைப் பகுதியில் டெங்கு பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்ட நிலையில், சிறுமிக்கான காய்ச்சல் எந்த வகை என்பதை அறிய விசாரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT