ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கோயில்களில் ஆக.12 வரை தரிசனத்துக்குத் தடை

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆக.12 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடித்திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் அனைத்துக் கோயில்களிலும் புதன்கிழமை (ஆக.4) முதல் வரும் 12 ஆம் தேதி வியாழக்கிழமை வரையில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை. ஆனால், வழக்கமான பூஜைகள் மட்டும் கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும்.

ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம் மற்றும் கீழக்கரை நகராட்சிகளில் திருவிழா நாள்களில் ஜவுளி, அங்காடிகள், சந்தைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவேண்டும். விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT