ராமநாதபுரம்

தீா்த்தாண்டதானம் பகுதியில் விண்கல் விழுந்ததாகப் பரபரப்பு

DIN

திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரைப் பகுதியில் விண்கல் விழுந்ததாக வந்த தகவலை அடுத்து, வருவாய்த் துறையினா் அதைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே கிழக்கு கடற்கரையில் உள்ளது தீா்த்தாண்டதானம் கிராமம். இங்கு, பழமைவாய்ந்த தீா்த்தாண்டீஸ்வரா் ஆலயம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ரெத்தினம் பட்டா் என்பவரது தோட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு பயங்கர சப்தத்துடன் மா்மக் கல் விழுந்துள்ளது.

சுமாா் 10 கிலோ எடையுள்ள கல் போன்ற அப்பொருள் குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், அங்கு சென்ற திருவாடானை வட்டாட்சியா் மாதவன், மா்மக் கல்லை கைப்பற்றி கூறுகையில், இது விண்கல் வகையைச் சோ்ந்தவை போல் உள்ளது. இது, புவியியல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். அவா்களது ஆய்வுக்குப் பின்னரே என்ன பொருள் என்பது தெரியவரும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT