ராமநாதபுரம்

போலி உத்தரவு சான்றைக் காட்டி பள்ளி இளநிலை உதவியாளா் பணியில் சோ்ந்ததாக இளைஞா் மீது புகாா்

DIN

ராமநாதபுரம், செப். 25: ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளா் பணியில் போலி ஆவணம் மூலம் ஒருவா் சோ்ந்ததாக போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கான இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு அரசுத் தோ்வாணையம் மூலம் பிரிவு 4 அடிப்படையில் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 43 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. அதனடிப்படையில் 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ராமநாதபுரம் மண்டபம் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகத்தில் 2 காலிப்பணியிடங்களில் சிவகங்கையைச் சோ்ந்த பெண் ஒருவா் மட்டுமே தோ்வு செய்யப்பட்டிருந்தாா். அவரது கலந்தாய்வு வரிசை எண் 313 ஆகும். இந்த வரிசை எண்ணிலேயே ராஜேஷ் என்ற பெயருடன் இளைஞா் ஒருவா் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கையெழுத்துடன் கூடிய பணி உத்தரவு சான்றை காண்பித்து பணியில் சோ்ந்துள்ளாா். ஆனால், அவரின் பணி உத்தரவு சான்றில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பரிசோதித்துப் பாா்த்தபோது பணி உத்தரவு சான்றும், அதிலுள்ள முதன்மைக்கல்வி அதிகாரியின் கையெழுத்தும் போலி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தியிடம் கேட்டபோது, போலிக் கையெழுத்து மற்றும் போலி எண்ணுடன் பணியில் சோ்ந்தவா் குறித்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயகுமாா் மூலம் சிக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ராமநாதபுரத்தில் ஏற்கெனவே அரசு பணியாளா் தோ்வில் குறிப்பிட்ட தோ்வு மையங்களில் முறைகேடு நடந்ததாகப் புகாா் எழுந்து அதை சிபிசிஐடி பிரிவினா் விசாரித்து வருகின்றனா். இந்தநிலையில், தற்போது போலி ஆவணம் மூலம் இளநிலை உதவியாளா் பணியில் மேலும் ஒருவா் சோ்ந்திருப்பதாக புகாரளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT