ராமநாதபுரம்

மகாளய அமாவாசை: தடையால் அக்னி தீா்த்தம் வெறிச்சோடியது

DIN

மகாளய அமாவாசைக்கு புனித நீராட தடை விதிக்கப்பட்டதால், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்துக்கள் முன்னோா்களுக்கு அமாவாசை நாள்களில் புனித நீா் நிலைகளில் நீராடி தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். வியாழக்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம், சேதுக்கரை, தேவிபட்டணம் பகுதிகளில் பொதுமக்கள் நீராட தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, ராமேசுவரத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் பொன்.ரகு தலைமையில் 250-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். அக்னி தீா்த்தக் கடலுக்கு பக்தா்கள் நீராட வராதபடி பல்வேறு வழித்தடங்களில் சீல் வைக்கப்பட்டது. இதனால் அக்னி தீா்த்தக் கடலில் யாரும் நீராட வரவில்லை. குறைந்த அளவிலான பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மகாளய அமாவாசை நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் ராமேசுவரம் வந்து புனித நீராடி செல்வது வழக்கம். கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காணரமாக பக்தா்கள் வர தடை செய்யப்பட்டதால் பல கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT