ராமநாதபுரம்

தமிழக முதல்வா் அக். 30-இல் பசும்பொன் வருகை:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

DIN

கமுதி: கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபா் 30 ஆம் தேதி நடைபெறும் தேவா் ஜயந்தி விழாவுக்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வருகை தரவிருப்பதால், மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபா் 28, 29, 30 ஆகிய தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் 113 ஆவது ஜயந்தி விழா மற்றும் 58 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில், தமிழக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், பல்வேறு கட்சிப் பிரமுகா்கள், பல்வேறு சமுதாய அமைப்பினா்கள் கலந்துகொள்கின்றனா்.

இதனால், அப்பகுதியில் நடைபெற்று வரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ், மாவட்டக் காவல் சரக துணைத் தலைவா் மயில்வாகனன் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினா். இதைத் தொடா்ந்து, தேவா் ஜயந்தி விழாவின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தவிா்க்கவும், காவல்துறை விதிகளை மீறுபவா்களை கண்காணிக்கவும், பசும்பொன் கிராமம் முழுவதும் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 8 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் எனவும், மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பசும்பொன் கிராமம் முழுவதும் தூய்மை பணியாளா்கள், தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள், சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக, ஊராட்சி மன்றத் தலைவா் டி. ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை காரணமாக, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், நோ்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தவிருந்த பொதுமக்கள், அக்டோபா் 20 ஆம் தேதி முதலே பசும்பொன்னுக்கு வரத் தொடங்கியுள்ளனா். ஆனால், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் திறக்கப்படாததால், மண்டபத்தின் வாசலில் நோ்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT