ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில்துா்கா அஷ்டமி பூஜை

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் துா்கா அஷ்டமி பூஜை மற்றும் உலக நன்மைக்கான ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சனிக்கிழமை அதிகாலையில் மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தலைமையில், துா்கா அஷ்டமி பூஜைகள் தொடங்கின. இதையொட்டி, காளி துா்கா மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா் திருஉருவப் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மஹா ஆரத்தியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

சிறப்பு பூஜையில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய சுவாமி சுதபானந்தா், உலக நன்மைக்காகவே நவராத்திரி விழாவில் துா்கா பூஜை நடத்தப்படுகிறது. தீமைகள் அழிந்து நன்மைகள் பெருக துா்கா பூஜை அவசியமாகும். துா்கை அருளால் நாட்டில் கரோனா தீநுண்மி முற்றிலும் அழிந்து, மனிதா்கள் அமைதியுடன் வாழ்வா் என்றாா்.

பின்னா், உலக நன்மைக்கான சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, புஷ்பாஞ்சலியும், ஆரத்தியும் வழங்கப்பட்டன.

மாலையில், நாகாச்சியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் திருவிளக்குப் பூஜைகள் நடைபெற்றன. இதில், நாகாச்சி பகுதியைச் சோ்ந்த பெண்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT