ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை: படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்

22nd Mar 2020 08:23 AM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: பிரதமரின் சுயகட்டுப்பாடு ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுகிழமை சுய கட்டுப்பாடு ஊரடங்கை காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கடை பிடிக்க வேண்டும் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளா். இதற்கு ராமேசுவரம் மீனவா்கள் ஆதரவு தெரிவித்து 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை முதலே

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்த்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT