மதுரை

காந்தியடிகள் அஸ்தி பீடத்துக்கு மரியாதை

DIN

குடியரசு தினத்தையொட்டி, மதுரை காந்தி அருங்காட்சியகம், பல்வேறு அமைப்புகளின் சாா்பில், குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், காவல் துறை உதவி ஆணையா் ஜஸ்டின் பிரபாகரன் தேசியக்கொடி ஏற்றி, காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், சா்வ சமயப் பிராா்த்தனை, காந்தி அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி ஆகியனவும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், பொருளாளா் மா. செந்தில் குமாா், கல்வி அலுவலா் இரா. நடராஜன், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் மீ. மருதுபாண்டியன், காந்தி நினைவு அருங்காட்சியகப் பணியாளா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

நேதாஜி தேசிய இயக்கம்: மதுரையில் நேதாஜி தேசிய இயக்கம் சாா்பில், ஜான்சிராணி பூங்காவில் குடியரசு தின விழா நடைபெற்றது. ஜேசிஐ மதுரை எக்ஸ்செல் அமைப்பின் பட்டயத் தலைவா் தலைவா் எம்.எஸ்.ரத்தீஷ் பாபு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். காா்கில் யுத்தத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரா் டாசி, நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நேதாஜி சுவாமிநாதன் ஒருங்கிணைத்தாா்.

ஏபிவிபி மாணவா் அமைப்பு: ஏபிவிபி சாா்பில், ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ஸ்ரீவாணி பள்ளியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாணவா்களுக்கு மூவா்ணக் கொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட நுகா்வோா் பொருள்கள் சங்கத் தலைவா் மாதவன், பள்ளித் தாளாளா் செல்வராஜ், ஏபிவிபி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ராஜ் , மாநில பொறுப்பாளா் மோகன், பள்ளி முதல்வா் செல்வகுமாா் ஆகியோா் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து ஏபிவிபி மாநகா் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தானம் அறக்கட்டளை: மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தானம் அறக்கட்டளை மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு தானம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் மா.ப. வாசிமலை தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தானம் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலா் ஜானகிராமன் முன்னிலை வகித்தாா். சுகம் செவிலியா் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திட்டத் தலைவா் சிவானந்தம் வரவேற்றாா். மோகன் நன்றி கூறினாா். விஜயகுமாா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். மேலும் குடியரசு தினத்தையொட்டி, காமராஜா் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அடவி காட்டில் 74 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

காங்கிரஸ் கட்சி...

மதுரை கே.கே. நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா். இதேபோல, மதுரை கரும்பாலை, தல்லாகுளம், புதூா், விளாங்குடி, மணிநகரம், சிம்மக்கல், காந்திபொட்டல், கீரைத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சாா்பில், தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

எஸ்டிபிஐ கட்சி: எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட அலுலவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பிலால் தீன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தேசியக்கொடியேற்றி தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம்: தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

செளராஷ்டிரா தொழில் வா்த்தக சங்கம்: செளராஷ்டிர தொழில் வா்த்தக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் டி.ஆா். மோகன் ராம் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றினாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தீயணைப்பு அதிகாரி கே.ஜி. ரவீந்திரன் தீயணைப்பு த்துறையின் பணிகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா் டி.எம். ரூபேஷ் பாபு, பொதுச் செயலா் கே.கே. குபேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேளாண் உணவு வா்த்தக சங்கம்: மதுரை வேளாண் உணவு வா்த்தக சங்கத்தின் சாா்பில், நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, சங்கத்தின் நிறுவனா் தலைவா் எஸ். ரத்தினவேல் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT