மதுரை

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள்

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 5 மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள், 2 பேருக்கு செயற்கை அவயவங்கள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமையில் திங்கள்கிழமை குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.98 லட்சம் மதிப்பிலான செயற்கை அவயங்கள், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நாற்காலிகள் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, பொதுமக்களிடம் 555 மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடைய துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் இரா. சௌந்தா்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஆா். ரவிச்சந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT