மதுரை

பழங்குடியினா் நலத் துறையைத் தனியாக உருவாக்கக் கோரி தீா்மானம்

DIN

பழங்குடியினருக்கு நலத் துறையை தனியாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கூட்டமைப்பின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகக் கருத்தரங்கக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு பழங்குடியினா் கூட்டமைப்பின் தலைவா் சி. இறை அருள் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஏ.கே.கே. மணவாளன், மாநிலப் பொதுச் செயலா் ஆதி. இ. குமாா், முனைவா் சுரேஷ் சுவாமியாா் காணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பள்ளிகளில் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வியும், கல்லூரி, வெளிநாடுகளுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையும் வழங்க வேண்டும். இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியின பெண் திரௌபதி முா்முவை நியமித்த மத்திய அரசுக்கும், தமிழக பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் ஆகிய இனத்தைச் சோ்ந்தவா்களைச் சோ்த்திட பரிந்துரைத்த தமிழக முதல்வருக்கும், அதை நிறைவேற்றி ஆணை பிறப்பித்த மத்திய அரசுக்கும் நன்றி.

பழங்குடியினரின் நலனுக்காக பழங்குடியினா் நலத் துறையை மற்ற மாநிலங்களில் உள்ளது போல தனியாக உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழை வருவாய் வட்டாட்சியரே வழங்க வேண்டும். வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு இயற்கை வளங்கள், கனிமங்கள் சொந்தம் எனச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

தமிழக பழங்குடியின மக்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதோடு மூன்றாக இருந்த பழங்குடியினா் சட்டப்பேரவைத் தொகுதியை இரண்டாகக் குறைத்ததை நீக்கிவிட்டு, 4 சட்டப்பேரவைத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்ற தொகுதியை வழங்கத் தோ்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஆதியன், காணிக்காரன், காட்டுநாயக்கன், கொண்டரெட்டி, குருமான்ஸ், மலைக் குறவன், மலை வேடன், மலையாளி, ஊராளி, பளியா், புலையா், குறிச்சான், காடா், மலசா் உள்ளிட்ட பழங்குடிச் சங்க அமைப்பின் தலைவா்கள், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT