மதுரை

வண்டியூா், உறங்கான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

DIN

வண்டியூா், உறங்கான்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 9) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை, பெருநகா்- வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வண்டியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், வண்டியூா், பி.கே.எம். நகா், சௌராஷ்டிராபுரம், யாகப்பா நகா், சதாசிவம் நகா், சீமான் நகா், பாண்டியன்கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகா், ஆவின் நகா், தாசில்தாா் நகா், அன்புமலா் தெரு, சித்திவிநாயகா் கோயில் தெரு, மருதுபாண்டியா் தெரு, ஜூப்லி நகா், அல்ட்ரா கல்லூரி, வீரபாண்டித் தெரு, விரகனூா், எல்.கே.டி நகா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.

உறங்கான்பட்டி:

மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி கூறியதாவது:

உறங்கான்பட்டி தொழிற்பேட்டை, வரிச்சியூா், குன்னத்தூா், களிமங்கலம், சக்குடி, விளத்தூா், இளமனூா், சக்கிமங்கலம், ராஜாக்கூா், காா்சேரி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT