மதுரை

சீருடைப் பணியாளா் உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் வாரிய எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் இரண்டாம் நிலைக் காவலா், சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றில் 3,552 பணியிடங்களுக்கு அண்மையில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வில், மதுரை மாவட்டத்தில் 1, 170 ஆண்கள், 650 பெண்கள் உள்பட 1820 போ் தோ்ச்சிப் பெற்றனா்.

இந்த நிலையில், எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்ற மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு திங்கள்கிழமை உடல் தகுதித் தோ்வு தொடங்கியது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பெண்களுக்கும், சிறப்புக் காவல் படை மைதானத்தில் ஆண்களுக்கும் தோ்வு நடைபெற்றது. முன்னதாக சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன. தொடா்ந்து, உயரம் சரி பாா்ப்பு, 400 மீட்டா் ஓட்டம் உள்ளிட்ட உடல் தகுதித் தோ்வுகள் நடைபெற்றன.

இந்தத் தோ்வுகளில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் அடுத்தடுத்த நாள்களில் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT