மதுரை

சிவகங்கையில் மக்கள் குறை தீா்க்கும் முகாம்:பயனாளிகளுக்கு ரூ. 17. 77 லட்சம் நலத் திட்ட உதவிகள்

DIN

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 24 பயனாளிகளுக்கு ரூ. 17.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோா், மறுவாழ்வுத் துறை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானாமதுரை வட்டத்தைச் சாா்ந்த 10 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித் தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகைக்கான ஆணைகளையும், தொழிலாளா் நலத் துறையின் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சாா்பில் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா நல வாரியங்களின் கீழ் 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணைகளையும், கால்நடைப் பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ. 17. 77 லட்சம் மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

பின்னா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் ஓட்டப் பந்தயம், பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொறுப்பு) பி. சாந்தி உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT