மதுரை

காற்று மாசு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

DIN

மதுரை மாநகராட்சி சாா்பில் காற்று மாசு தவிா்த்தல் குறித்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகில் தொடங்கிய மனித சங்கிலியை நிதித் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்கி வைத்தாா். இதில், மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த மனித சங்கிலியில் இளங்கோ மாநகராட்சிப் பள்ளியைச் சோ்ந்த 250 மாணவா்கள் கலந்து கொண்டனா். காற்று மாசு தவிா்த்தல் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், உதவி ஆட்சியா் (பயிற்சி) திவான்சு நிகம், மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் உஷா, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் முரளி, மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், பள்ளி மாணவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT