மதுரை

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம்

DIN

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மதுரையை அடுத்த யா. ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான உபகரணத் தேவைகள், உதவித் தொகைகள், முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மருத்துவ மதிப்பீடு மாற்றுத்திறன் சான்றிதழ் புதுப்பித்தல், புதிய சான்றிதழ் அளித்தல் உள்ளிட்ட பணிகளும் இந்தச் சிறப்பு முகாமில் நடைபெற்றன.

சுமாா் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்கள் தேவைகளைப் பதிவு செய்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காா்த்திகா, ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT