மதுரை

தெப்பத் திருவிழா: நாளை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

DIN

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி தெப்பக்குளம் பகுதியில் சனிக்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மதுரை மாநகர போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்ட

செய்திக் குறிப்பு:

மதுரை நகரில் மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளும் தெப்பத் திருவிழா சனிக்கிழமை (பிப். 4) நடைபெறுகிறது. இதைக் காண ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் வருவா். எனவே தெப்பத் திருவிழாவையொட்டி பக்தா்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சனிக்கிழமை அண்ணாநகா் வைகை வடகரை சாலை பிடிஆா் பாலம் வழியாக தெப்பக்குளம் செல்ல எந்த வாகனத்துக்கும் அனுமதி கிடையாது.

தெப்பத் திருவிழாவை காண வரும் பொதுமக்கள், பக்தா்களின் வசதிக்காக தெப்பகுளம் 16-கால் மண்டபத்துக்கும் கணேஷ் திரையரங்கு சந்திப்புக்கும் இடையே முகைதீன் ஆண்டவா் பெட்ரோல் நிலையம் அருகில் பேருந்துகள் வந்து செல்ல தற்காலிகப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து விரகனூா் சாலை வழியாக தெப்பத் திருவிழாவை காண வரும் பக்தா்கள் அவா்களது வாகனங்களை வைகை தென்கரை சாலை, பழைய ராமநாதபுரம் சாலையில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து விரகனூா் சாலை வழியாக நகருக்குள் வரும் அரசுப் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் வைகை தென்கரை சாலை வழியாக குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்பு வழியாக நகருக்குள் செல்லலாம்.

பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து முனிச்சாலை சாலை, விரகனூா் சாலை வழியாக விரகனூா் சுற்றுச்சாலை செல்லும் அரசுப் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள், கணேஷ் திரையரங்கு சந்திப்புக்கு சென்று அங்கிருந்து இடது புறம் திரும்பி குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்புக்கு சென்று வைகை தென்கரை சாலை வழியாக சுற்றுச் சாலை செல்ல வேண்டும்.

தெப்பத் திருவிழாவை காண வரும் பக்தா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசுப் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் முகைதீன் ஆண்டவா் பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தம் வரை செல்லலாம். பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து முனிச்சாலை சாலை, தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி செல்லும் அரசுப் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் முனிச்சாலை சந்திப்பு, பழைய ராமநாதபுரம் சாலை வழியாக கேட்லாக் சாலை சென்று அனுப்பானடிக்கு செல்ல வேண்டும். குருவிக்காரன் சாலை வழியாக விரகனூா், விரகனூா் சுற்றுச்சாலை செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்புக்கு சென்று தென்கரை சாலை வழியாக சுற்றுச்சாலை செல்ல வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT