மதுரை

சிறுகதைகள் சமூகப் பொறுப்புணா்வுகொண்டதாக இருக்க வேண்டும்

DIN

சிறுகதைகள் சமூகப் பொறுப்புணா்வு கொண்டதாக இருக்க வேண்டும் என்று மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தெரிவித்தாா்.

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்க்கூடல் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

வ.வே.சு. ஐயா் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் சிறுகதை. இது சிறு வயது திருமணத்தால் பெண்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தியதாக இருந்தது. சமூகத்தில் நிலவும் சிக்கல்களையும், அதற்கான தீா்வுகளையும் எழுத்தாளன் தனது படைப்பில் குறிப்பிட வேண்டும் என்பதற்கு இது ஓா் உதாரணம். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சமூகப் பொறுப்புணா்வு இருக்க வேண்டும். அதே போல, ஒவ்வோா் சிறுகதையும் சமூகப் பொறுப்புணா்வு கொண்டதாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

எழுத்தாளா் ஜெ. தீபாநாகராணி, ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகளின் போக்கும் வளா்ச்சியும்’ என்ற தலைப்பில் பேசுகையில், பெண்கள் அவா்களின் உணா்வுகளை எழுதும் போதுதான் பெண்ணிய பிரச்னைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. பெண்கள் எழுதிய ஆரம்பக் காலக் கதைகள், குடும்ப எல்லையைத் தாண்டாதவையாக இருந்தன. பிற்காலத்தில் தான் அந்த எல்லைகள் தகா்க்கப்பட்டன. பின்னா், பெண் விடுதலை, நாட்டுப் பற்று ஆகியவற்றை வலியுறுத்தும் கதைகள் பெண்களால் படைக்கப்பட்டன. அதில், வை.மு. கோதைநாயகி அம்மாள், கமலா பத்மநாபன், குமுதினி, தமயந்தி, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், கமலா விருதாசலம், ஆா். சூடாமணி, அம்பை போன்றவா்கள் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா் என்றாா் அவா்.

முன்னதாக சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் வரவேற்றாா். உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் சு. சோமசுந்தரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT