மதுரை

மணல் குவாரிகளுக்குத் தடை கோரி வழக்கு:கண்காணிப்புக் குழு பதிலளிக்க உத்தரவு

DIN

கல்லணை அருகே செயல்படும் மணல் குவாரிகளுக்குத் தடை கோரிய வழக்கில் கண்காணிப்புக் குழு வருகிற 16- ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச் சங்கத் தலைவா் சண்முகம் தாக்கல் செய்த மனு:

கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் வரம்பின்றி எடுக்கப்பட்டால் குடிநீா் ஆதாரம் மட்டுமன்றி, விவசாயப் பணிகளும் பாதிக்கப்படும். தற்போது தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டத்தில் திருச்சினம்பூண்டி, திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் கூகூா் பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது.

இதனால், கல்லணைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, கல்லணையிலிருந்து கிழக்கு, மேற்குப் பகுதிகளில் தலா 15 கி.மீ. தொலைவுக்கு மணல் அள்ளத் தடை விதிப்பதுடன், ஏற்கெனவே செயல்படும் மணல் குவாரிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், கல்லணைப் பகுதியில் 15 கி.மீ. தொலைவுக்கு மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்திருந்தனா். இந்த நிலையில், தடையை நீக்கக் கோரி குவாரி உரிமையாளா்கள் சங்கம், பொதுப் பணித் துறை சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞா், முறையான அனுமதியுடன் அரசின் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. மேலும், குவாரி நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரா் முறையீட்டை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவில் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் தரப்பு கோரிக்கையை மாவட்ட கண்காணிப்புக் குழுவில் தாக்கல் செய்யலாம். அந்தக் குழுவினா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிற 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். மேலும்,அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பாலங்கள், கல்லணைப் பகுதியில் மணல் அள்ளக் கூடாது. வழக்கு வருகிற 16- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT