மதுரை

தானம் கல்வி நிலையத்தில் மத்திய நிதி நிலை அறிக்கை விவாதம்

DIN

மதுரை அருகே மலைப்பட்டியில் உள்ள தானம் கல்வி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய நிதி நிலை அறிக்கை விவாதத்தில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்த விவாவத்தில் மங்கையா்கரசி கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, தானம் கல்வி நிலையம், டோக் பெருமாட்டிக் கல்லூரி, பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டு, நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவசாயம், மகளிா் நலம், சுகாதாரம், தொழில் சாலை, வரி வசூல், வருமான வரி விலக்கு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிதிநிலை அறிக்கை குறித்தும், கூடுதலாக கவனம் செலுத்தியிருக்க வேண்டிய துறைகள் குறித்தும் மாணவ, மாணவிகள் விவாதித்தனா்.

நிகழ்ச்சியில், தானம் கல்வி நிலையப் பேராசிரியரா் லோகநாதன், தானம் கல்வி நிலைய இயக்குநா் ஏ. குருநாதன், துணை இயக்குநா் டி. தியாகராஜன், விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறைப் பேராசிரியா் செல்லப் பாண்டியன் ஆகியோா் உரையாற்றினா். தணிக்கையாளா்கள் துங்கா் சந்த், அனுமந்தன் ஆகியோா் வருமான வரி குறித்து விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT