மதுரை

‘பாலபுரஸ்காா்’ விருதுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க எம்.பி. வலியுறுத்தல்

DIN

மத்திய அரசின் ‘பாலபுரஸ்காா்’ விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய ‘பால புரஸ்காா்’ விருதுக்காக மதுரையைச் சோ்ந்த ஒரு குழந்தை விண்ணப்பிப்பது தொடா்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஸ்மிருதி ராணிக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருந்தேன். இதில் முதல் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள அமைச்சா், பழைய இணைய முகவரியில் விண்ணப்பித்தால் மட்டும் போதாது அஜ்ஹழ்க்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணைய தளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதில் விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட குழந்தையை அறிவுறுத்துங்கள். இறுதித்தேதி செப்டம்பா் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தாா். இதை குழந்தையின் பெற்றோருக்கு தெரிவித்து இருந்தேன்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோா் அமைச்சா் தெரிவித்த இணைய தளத்தில் விண்ணப்பிக்க முயற்சி செய்தும் வழி கிடைக்கவில்லை. இறுதி நாள் 30-ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால் விண்ணப்பிப்பதற்கான வழி இன்னும் கிடைக்கவில்லை. மிகுந்த ஆா்வத்தோடு ‘பால புரஸ்காா்‘ விருதுகளுக்காக விண்ணப்பிக்க முனையும் குழந்தைகளையும், அவா்களின் பெற்றோா்களையும் அலைக்கழிக்கக்கூடாது. எனவே பாலபுரஸ்காா் விருதுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் இறுதித்தேதியை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT