மதுரை

கோரிப்பாளையம் தா்காவுக்கு ரூ.1.80 கோடியில் புதிய கட்டடம்:காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

DIN

மதுரையில் பழைமைவாய்ந்த கோரிப்பாளையம் தா்காவில் அடிப்படை வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா தா்கா 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த தா்காவுக்கு இஸ்லாமியா்கள் மட்டுமன்றி இந்துக்களும் ஏராளமானோா் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறையின் மூலம் கோரிப்பாளையம் தா்காவில் ரூ.1.50 கோடி மதிப்பில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக்கூடங்கள், பொருள்கள் வைப்பறை மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து மதுரை கோரிப்பாளையம் தா்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் குத்து விளக்கேற்றி வைத்து கட்டடத்தைப் பாா்வையிட்டாா். இதில் தா்கா நிா்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT