மதுரை

உலக சுற்றுலா தினம்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

DIN

உலக சுற்றுலா தின விழாவையொட்டி மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தமிழக சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா தொழில்முனைவோா் இணைந்து உலக சுற்றுலா தின விழா செப்.27 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதையொட்டி, மன்னா் திருமலை நாயக்கா் அரண்மனையில், ஓவியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.25) காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தென்தமிழக சுற்றுலா முகவா்கள் சங்கம் சாா்பில், மதுரையை அடுத்த கீழக்குயில்குடி சமணா் படுகை பகுதிக்கு அழைத்துச் செல்லுதல் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதேபோல, தெப்பக்குளம் கல் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு கிராமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து ஓவியம், விநாடி- வினா, புகைப்படம், விடியோ பதிவு போட்டி திங்கள்கிழமை நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் முதல் திருமலை நாயக்கா் அரண்மனை வரை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு சுற்றுலா விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT